பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கின்ற ஒரே நாடு பாகிஸ்தான்: ஐ.நாவில் இந்தியா அதிரடி !

அண்டை நாடுகளுடன் எல்லை தாண்டிய பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2021-10-05 07:22 GMT

அண்டை நாடுகளுடன் எல்லை தாண்டிய பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது கூட்டத்தில் பேசிய ஐநா தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத், பாகிஸ்தான் பிதிநிதி இங்கு அமைதி, பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான் கான், ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட உலக பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறது.

ஐம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் இந்த விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவைகள் தகுதியற்றவை ஆகும். சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News