அதாள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்: பணக்கார வெளிநாட்டினர் முதலீடு செய்தால், நிரந்தர குடியுரிமை ரெடி!

Pakistan to offer permanent residency scheme for rich foreign nationals to boost weak economy

Update: 2022-01-18 03:35 GMT

அமெரிக்கா மற்றும் கனடா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் உட்பட பணக்கார வெளிநாட்டு குடிமக்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கும், பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் தேசிய வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை கொண்டு வர பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை முறையாக அறிமுகப்படுத்திய புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கைக்கு இணங்க புதிய திட்டம் இருப்பதாக தகவல் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ட்வீட் மூலம் அறிவித்தார்.

புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையின்படி, புவி பொருளாதாரத்தை தனது தேசிய பாதுகாப்பு கோட்பாட்டின் கருவாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன் கீழ் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை திட்டத்தை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தித்தாள், இந்த திட்டத்தின் பின்னணியைப் பற்றி வெளியிட்ட செய்தியில், PR திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் துருக்கி, மலேசியா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்லும் பணக்கார ஆப்கானியர்களை ஈர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதலாக, இந்த திட்டம் கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்கள் மதத் தலங்களில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். இந்தத் திட்டத்தின் மூன்றாவது நோக்கம், பாகிஸ்தானில் தொழில்துறை அலகுகளை நிறுவ விரும்பும் சீனப் பிரஜைகளை ஊக்குவிப்பதாகும் .

"இது ஒரு வரலாற்று நடவடிக்கையாகும், பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டினர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்," என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறினார்.

மூன்றே நாட்களில், பல பில்லியன் டாலர்கள் அன்னியச் செலாவணியைக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறியவுடன் வெளிநாட்டினர் வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடியும் என்று கூறினார்.




Tags:    

Similar News