பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வசூல் ₹2 கோடியை தாண்டியுள்ளது!
பழனி தண்டாயுதபாணி கோவிலில் வசூல் 2 கோடியை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களும் அதற்கென்று தனிச் தரப்பில் பெற்றுள்ளன. எப்போதும் கோவில்களில் பக்தர்களின் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் எந்த கோவிலாக இருந்தாலும், வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு கோவிலுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். பக்தர்கள் தரும் காணிக்கையை உண்டியலில் மூலம் சேகரிக்கப்பட்ட பிறகு கோவில் நிர்வாகம் ஒதுக்கும் நாட்களில் அதன் எண்ணிக்கையும் நடைபெறும். அந்த வகையில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் வசூல் எண்ணிக்கை தற்பொழுது இரண்டு கோடியை தாண்டியுள்ளது.
பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் மலைக்கோயிலில் கணக்கிடப்பட்ட உண்டியல் வசூல் திங்கள்கிழமை ₹2 கோடியைத் தாண்டியது. 2.8 கோடி ரொக்கம், 907 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், 11,690 கிராம் வெள்ளி பொருட்கள், 167 மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் பிற நாடுகளின் கரன்சி நோட்டுகள் காணிக்கையாக இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிலில் நடந்த எண்ணும் பணியை இணை இயக்குனர் நடராஜன், உதவி இயக்குனர் செந்தில் குமார் தலைமையில் நடந்தது. பழனியில் உள்ள வங்கி அலுவலர்கள், அருள்மிகு பழனி ஆண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி பணியாளர்கள், மாணவ, மாணவிகள், கோயில் அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இவற்றை எப்படிப்பட்ட பணிகளுக்கு கோவில் நிர்வாக பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதையும் கோவில் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
Input & Image courtesy: The Hindu