ரோப் பொருத்தும் பணி நிறைவு - பழனி முருகன் கோவிலில் மீண்டும் துவங்கும் சேவை!

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடங்குகிறது.

Update: 2022-09-26 02:41 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அடிபாதை இல் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை ஆகிய 2 பிரதானமாக உள்ளது. மேலும் மின் இழுவை தேவைவையில் ரோப் கார் ஆகிய சேவைகளும் உள்ளனர். இதில் மேற்கு கிரி வீதியில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து மூன்று மின் இழுவை ரயில்கள் அடிக்கடி அடிவாரத்தில் இருந்து கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்காக இயக்கப்படுகிறது..இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் எண் மின் இழுவை இணைக்கப்பட்ட ரோப் பழுதானது இதையொட்டி அதன் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


பின்னர்  மின் இழுவை ரயில் உள்ள ரோப் அகற்றப்பட்டு புதிய ரோப் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக சட்டீஸ்கர் மாநிலம் பிரிஞ்சி பகுதியில் சுமார் ஒன்பது லட்சத்தில் புதியதாக இரண்டு ரோப் கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டது. இதில் ஒரு ரோப் மூன்றாம் எண் இழுவை ரயிலில் பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


மற்றொரு ரோப் கார்கள் இழுவை கோவில் நிர்வாகத்தினர் இருப்பு வைத்துக் கொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடந்த பணி நிறைவடைந்து. நேற்று முன்தினம் ரயிலில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைக்கப்பட்ட சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை வெற்றிபெறமாக நிறைவு அடைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் மூன்றாம் எண் மின் இழுவை சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News