800 ஆண்டு பழமையான கல்வெட்டு: சிவனுக்கு ஊரை தானமாக வழங்கிய பாண்டிய மன்னன்!

800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுப் பாறையின் தகவல் படி சிவன் கோவில் பூஜைக்காக ஒரு ஊரே தானமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-03-22 12:13 GMT

பேரையூர் மொட்டை மலைப்பகுதியில் ஆதிகால மனிதன் வாழ்வதற்கான வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் குகைகள், வாழ்வியல் எச்சங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள், பாறை ஓவியம், பாறை கல்வெட்டு ஆகியவை நிறைந்த பகுதியாக இது காணப்படுகிறது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்ட பாண்டிய நாட்டு பன்னாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளர் முனிஸ்வரன் அவர்கள் தற்போது ஆச்சரிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறும் பொழுது, பேரையூரில் மேல பரங்கிரி என்று அழைக்கப்படக்கூடிய மொட்டை மழை உள்ளது. இங்கு வெள்ளை நிற பாறை ஓவியம் மனித இனக்குழு இப்பகுதியில் வாழ்ந்ததற்கு சான்றுகளாக அமைந்திருக்கிறது. பேரையூர் 800 ஆட்டங்களுக்கு முன்பு ஆண்டுகளுக்கு முன்பு இது கடுங்கோன்மங்கலம் என்று அழைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டு தகவல் கூறுகிறது.


காலப்போக்கில் இவை கொடுங்கோல் மங்கலம் பேரையூர் என்று மருவி இருக்கலாம். கி.பி 13ம் நூற்றாண்டில் காலகட்டத்தில் செங்கொடி நாட்டு பிரிவின் உட்பகுதியாக இவை காணப்பட்டு இருக்கிறது. மலைவுச்சியின் கோவில் பின்புறம் 129 வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் வெட்ட வெளிப்பாறை கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருக்கிறது. இக்கல்வெட்டு கிட்டத்தட்ட 51 வரி கொண்ட தமிழ் எழுத்துக்களால் வெட்டப்பட்டு இருக்கிறது. இக்கல்வெட்டுப் பேரையூரின் பழமையான பெயர் கடுங்கோன்மங்கலம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


மேலும் இது செங்கொடி நாட்டு எல்லைக்குட்பட்டவை என்றும் இப் பகுதியில் இருந்த அனைத்து நிலங்களும் குறிப்பாக இந்த நிலத்தில் விளையும் விளைச்சல்களும் அங்கு வீற்றிருக்கும் மல்லிகா அர்ச்சுனர் என்று அழைக்கப்படக்கூடிய சிவன் கோவிலுக்கு கால பூஜை மற்றும் திருவிழா பராமரிப்பு போன்ற பணிகளுக்காக பல நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் யார், யார் இந்த தானத்தில் ஈடுபட்டார்கள், அவர்களுடைய பெயர்கள் மற்றும் அவர்களின் வம்சம் போன்றவை கல்வெட்டில் பொரித்து இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News