முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள்- அதிகாரிகள் கையூட்டு பெறுவதாக மக்கள் புகார்!
அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு, முறைகேடான இடங்களில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதாக மக்கள் புகார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடகமலைக்குண்டு கிராமம் தேனி நகரத்திற்கு மேலாக அசுர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. கடகமலை குண்டில் வீட்டுமனைகள் தேனியை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் வீட்டுமனை பட்டாக்கள் எப்படி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது? என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் இருக்கிறது. ஏனெனில் நகரத்தை விட இந்த பகுதிகளில் வீட்டின் விலை லட்சக்கணக்கில் இருப்பதாகவும் மக்கள் வருகிறார்கள்.
குறிப்பாக இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் பல மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் கடுமையான விதிகளை ஒரு பட்டா கூட வழங்குவதில்லை. ஆனால் காலியாக உள்ள இடங்களுக்கு பல லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து கொண்டு வருவாய் துறையினர் வீட்டு கட்டி குடியிருப்பதாகவும், வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காலியிடங்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்கி வரும் வருவாய் துறையின் மீது துறை ரீதியாக அரசு நடவடிக்கை எடுத்து முறைகேடாக வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar