மேலூர் அருகே பழமையான பிள்ளையார் கோவில்: கோவிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு?
மேலூர் அருகில் முத்துசாமி பட்டியில் உள்ள பழமையான பிள்ளையார் கோவில் இடிக்க மக்கள் எதிர்ப்பு.
மேலூர் அருகே முத்துசாமி பட்டியில் பிள்ளையார் கோவில் உள்ளது குறிப்பாக இந்த பிள்ளையார் கோவில் மிகவும் பழமையானதாக அறியப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள இடம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கு கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது அரசு புறம்போக்கு நிலம் என்பதன் காரணமாக இதனை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வருவாய் துறையினர் ஜே.சி.பி இயந்திரத்துடன் கோவிலை இடிக்க போலீஸ் பாதுகாப்புடன் வந்திருந்தார்கள்.
ஆனால் இந்நிலையில் பா.ஜ.க மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய தலைவர் குமார், மேலூர் நகர தலைவர் கேசவ மூர்த்தி, மாவட்ட ஆலய பாதுகாப்பு தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் ஏராளமான கிராம மக்கள் கோவிலில் முன்பு கூடி கோவிலில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கோவில் மிகவும் பழமையானது மேலும் உள்ளூர் மக்களின் வழிபாட்டு தெய்வமாக இந்த கோவில் வருவதாகவும் மக்கள் முறையிட்டு இருந்தார்கள். கிராம மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிறகு கோவில் இடுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi