தி.மு.கவை கண்டித்து பாலை தரையில் ஊற்றி பெண்கள் போராட்டம்: கவனத்தில் எடுக்குமா தமிழக அரசு?

தி.மு.க அரசு தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இரண்டு நாட்களாக சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்தும் மகளிர்கள்

Update: 2023-03-23 01:32 GMT

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் சார்பாக தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பால் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் கடந்த 17ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் கொள்முதலை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


குறிப்பாக இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சாலைகளில் பாலை ஊற்றி நேற்று முன்தினம் முதல் சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அந்த ஒரு பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று இரண்டு நாட்களாக அவர்கள் பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்திக் கோரி சுமார் 100 லிட்டர் பாலை தரையில் ஊற்றி கறவை மாடுகளுடன் சாலைகளில் மறியல் ஈடுபட்டார்கள்.


தி.மு.க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பால் உற்பத்தியாளர்களிடம் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்ட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News