ஸ்ரீ ராமரை அவமதித்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்-பிரதமர் மோடி!

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்ரீ ராமரை அவமதிப்பது போல் கருத்துக்கள் வெளியிட்டு வருவதை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2024-03-07 11:13 GMT

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கடவுள் ஸ்ரீ ராமரை அவமதித்து வருகின்றனர். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடவுள் ஸ்ரீ ராமர் தொடர்பாக தி.மு.க எம்.பி ஆர்.ஆசா சில தினங்களுக்கு முன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பிரதமர் மோடி மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்தார்.


பீகாரில் ரூபாய் 1200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மேற்கு சாம்பரான் மாவட்டம் பெட்டியா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில் பீகாரில் சுமார் 15 ஆண்டுகால ராஷ்ட்ரிய ஜனதாதள ஆட்சி காலத்தில் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் அவரின் குடும்பத்தினரும் கட்சியை அறிமுகப்படுத்தினர். அவர்கள் இந்த மாநிலத்திற்கு பெரும் குற்றம் இழைத்தவர்கள் ஆவர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியின் தவறான நிர்வாகத்தால் மாநிலத்தை விட்டு இதர பகுதிகளுக்கு இடம்பெறும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டனர்.


ஒரு முழு தலைமுறையின் எதிர்காலமும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதே நேரம் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வளமடைந்தது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகே  இருந்து மாநிலம் ஈர்க்கப்பட்டது .எனக்கென சொந்த குடும்பம் இல்லாதது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது .மகாத்மா காந்தி, அம்பேத்கர் , ஜெயப்பிரகாஷ் நாராயன் , கர்பூரி தக்கூர் போன்ற தலைவர்களும் தங்களின் குடும்பத்தை முன்னிறுத்தவில்லை. இந்த தலைவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் அவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிப்பார்கள்.


காங்கிரஸ் கட்சி ஜனதா தளம் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் ஏற்படுத்திய தடைகளால் அயோத்தியில் கடவுள் ஸ்ரீ ராமர் பல ஆண்டுகளாக கூடாரத்திலேயே இருக்க நெறி இட்டது. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் தடைகள் அகற்றப்பட்டு ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடவுள் ஸ்ரீ ராமரை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் பிரதமர் மோடி.


SOURCE :Dinamani

Similar News