மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான பெரியார் பல்கழைக்கழக பேராசிரியர் நீதிமன்றத்தில் சரண்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் ஒன்று பெறப்பட்டது இதனைத்தொடர்ந்து உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-25 02:21 GMT

பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டால் உடனே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்து வருபவர் பிரேம்குமார் என்பவர், அவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  


பாதிக்கப்பட்ட மாணவி பேராசிரியர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். இத்தகையதொரு சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விளக்கம் கேட்டு உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் பார்க்கும் ஆசையில் மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு சரணடைந்துள்ளார். 


மேலும் இந்த வழக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு என்பதால் சம்பந்தப்பட்ட மாணவி நேரில் ஆஜராகி தன்னுடைய உறுதிமொழியை கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாயுடன் ஆஜரான மாணவி தனக்கு நடந்த சம்பவம் உண்மைதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் தற்போது மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமையில் விசாரணை இந்த வழக்கு தீர்ப்பு, வரும் 29-ஆம் தேதி வரை பேராசிரியர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News