பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் - தொடர் போராட்டம்?
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாளர்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் தூய்மை பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த முறைப்படி மூன்று ஷிப்டுகளாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க வேண்டும். பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து ஒப்பந்த பணியாளர்கள் ஆறாம் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதனால் மருத்துவமனையின் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பிரச்சனையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று ஒப்பந்த பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamani