முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு: நேபாள பிரதமர் இரங்கல்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-12-09 04:46 GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் தீக்காயங்களுடன் கேப்டன் வருண் சிங் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் இந்திய நாட்டையே உலுக்கியது. இதற்கு இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ''ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் மறைவு துயரத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News