ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்: மருத்துவத் துறை நிபுணத்துவத்தைப் பாராட்டிய பிரதமர்!
இந்தியா ஃபிட் ஆகவும், சூப்பர் ஹிட்டாகவும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் உரை.
பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 60வது தேசிய மாநாட்டில் காணொலிச் செய்தி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆறுதல், நம்பிக்கை, விரிவாற்றல் ஆகிவற்றின் சின்னமாகவும், குணமளிப்பவர்களாகவும் திகழும் இயன்முறை மருத்துவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒரு இயன்முறை மருத்துவர், உடல் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் மட்டுமல்லாமல், உளவியல் சவாலை சமாளிக்க நோயாளிக்கு தைரியத்தையும் தருகிறார்.
இயன்முறை மருத்துவத் தொழிலின் நிபுணத்துவத்தைப் பாராட்டிய பிரதமர், தேவைப்படும் காலங்களில் ஆதரவை வழங்கும் அதே மனப்பான்மை ஆட்சியிலும் இருப்பதை எடுத்துக் காட்டினார். வங்கிக் கணக்குகள், கழிப்பறைகள், குழாய் நீர், இலவச மருத்துவ சிகிச்சை, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் ஆதரவு நீடிப்பதால், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் கனவு காணும் தைரியத்தைப் பெறுகின்றனர். அவர்களின் ஆற்றலுடன் அவர்கள் புதிய உயரங்களை அடையும் திறன் கொண்டவர்கள் என்பதை நாங்கள் உலகிற்குக் காட்டியுள்ளோம் என்று பிரதமர் கூறினார்.
இதேபோல், நோயாளியின் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் தொழிலின் பண்புகளைத் தொட்டு, இந்தியாவும் தற்சார்பை நோக்கி நகர்கிறது. நோயாளி மற்றும் மருத்துவர் இருவரும் இந்தப் பிரச்சனையில் பணியாற்ற வேண்டும் என்பதால் இந்தத் தொழில் சப்கா பிரயாஸ் என்பதை அடையாளப் படுத்துகிறது. இது பல திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா, பெண் குழந்தை பாதுகாப்பு போன்ற மக்கள் இயக்கங்களில் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் நெட்வொர்க்கில் இயன்முறை மருத்துவர்களையும் அரசு சேர்த்துள்ளது. இது நோயாளிகளைச் சென்றடைவதை எளிதாக்கியுள்ளது என்று மோடி கூறினார்.
Input & Image courtesy: News