5,000க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் - பிரதமரின் புதிய அறிவிப்பு!

நாட்டின் இளைஞர்களுக்கு திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு புதிய மந்திரம் பிரதமர் மோடி.

Update: 2022-09-18 03:41 GMT

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று நாட்டின் இளைஞர்களுக்கு "திறன், மறுதிறன் மற்றும் மேம்பாடு" என்ற மந்திரத்தை வழங்கினார். மேலும் வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் திறன்களை புதுமைப்படுத்தவும் தொடர்ந்து மேம்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். தொழில்நுட்ப பயிற்சி நிறுவன சார்பில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இணையதளம் வழியாக கலந்து கொண்டு உரையாடினார்.


இந்தியாவில் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக 5,000 க்கும் மேற்பட்ட புதிய 'திறன் மையங்களை' மையம் திறக்கப் போவதாக பிரதமர் பகிர்ந்து கொண்டார். தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ITI மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு மத்தியில் இணையதளம் வழியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் நாட்டில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக பிரதமர் எடுத்துரைத்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சீட்டா திட்டம் கீழ் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இருந்து அழிந்து போன சிறுத்தைகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்து கூறி தற்பொழுது அழிவின் விளிம்பில் உள்ள அத்தகை உயிரினங்களை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை மத்திய அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: IndiaTV News

Tags:    

Similar News