வைர விழா காணும் CBI: பிரதமர் தொடங்கி வைத்த கோலாகலமாக கொண்டாட்டங்கள்!

CBI வைர விழா கொண்டாட்டங்களை ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-04 02:15 GMT

மத்திய புலனாய்வு அமைப்பின் (CBI) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சி.பி.ஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கி உள்ளார்.


மேலும், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.பி.ஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் திறந்து வைத்திருந்தார். சி.பி.ஐயின் வைர விழா கொண்டாட்ட ஆண்டைக் குறிக்கும் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை அவர் வெளியிட்டு உள்ளார். சி.பி.ஐயின் ட்விட்டர் பக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். ஏப்ரல் 1, 1963 தேதியிட்ட இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் மத்திய புலனாய்வு அமைப்பு நிறுவப்பட்டது.


மத்திய புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்ட தற்போது 75 ஆண்டுகள் பல்வேறு பாதைகளை கடந்து வந்து இருக்கிறது. எனவே வைர விழாவில் கொண்டாடும் மத்திய புலனாய்வு அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News