நூற்றாண்டு தொடர்புகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி: சௌரஷ்டிரா தமிழ் சங்கமம்!

சௌரஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்பை வலுப்படுத்துகிறது.

Update: 2023-03-27 01:50 GMT

தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா சங்கமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சேலத்தில் நடைபெற்ற தாண்டியா நடனத்தை குஜராத் மாநில அமைச்சர் ஜகதீஷ் விஸ்வகர்மாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கண்டேன் என்று தெரிவித்துள்ளார்.


அதற்குப் பதிலளித்த பிரதமர்,"சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது." என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு கூட காசி தமிழ்ச் சங்கம் என்ற ஒரு நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் உள்ள காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையான தொடர்புகளையும் எடுத்து கூறும் விதமாக அந்த ஒரு நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.


காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்து இருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டு இருந்தார்கள். அந்த வகையில் தற்பொழுது மீண்டும் சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியின் மூலமாக குஜராத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் விதமாக இது அமைந்து இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News