அமெரிக்க சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் வாஷிங்கடன் புறப்பட்ட நிலையில் இன்று அவர் வாஷிங்கடன் சென்றடைந்தார். அவருக்கு அங்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அதனை முடித்துக்கொண்டு வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், அமெரிக்க முன்னணி தொழில் நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், முதலீடுகள் செய்வதற்கும் அழைப்பு விடுக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Source, Image Courtesy: Daily thanthi