ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு !

தஜிகிஸ்தானில் நாளை துவங்க உள்ள எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இணைய வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

Update: 2021-09-16 03:05 GMT

தஜிகிஸ்தானில் நாளை துவங்க உள்ள எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இணைய வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்திர உச்சி மாநாடு, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நாளை துவங்க உள்ளது.

இந்த கூட்டத்திற்கு தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ராஹ்மோன் தலைமை தாங்குகிறார். இந்திய பிரதிநிதிகளின் குழுவுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் மோடி இணைய வாயிலாக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்கிறார். இதில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் கொரோனா தொற்று குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News