ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி - கோலாகல வரவேற்பு

தமிழகத்திற்கு இன்று மாலை வருகைதரும் மோடி அவர்களுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.;

Update: 2022-05-26 11:51 GMT
ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி - கோலாகல வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தெலுங்கானாவில் மிகவும் செய்து முடித்த பின்பு அந்த இருந்து வெளிப்படும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை மெரினா கடற்கரை கடற்கரை பகுதியில் உள்ள அடையாறு கப்பற்படை தளத்திற்கு வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக வருகை தருகிறார். எனது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தருவதற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.


ஐ.என்.எஸ் கப்பல் படை தளத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் வழியாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சேம்பியன் சிவானந்தா சாலை, பெரியார் சாலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை அடைகிறார். இதற்காக அங்கு போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருப்பதும், பல்வேறு போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பிற்காக தற்போது பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் செல்லும் வழித்தடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். ஸ்டேடியம் அருகில் பல்வேறு அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சம் கருதி, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது பெரியமேடு பகுதி விழாக்கோலம் பூண்டதாக தெரிகிறது.

Input & Image courtesy:Malaimalar News

Tags:    

Similar News