தமிழக பாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்த ஆசீர்வாதி வாங்கிய பிரதமர் மோடி: எங்கு தெரியுமா?

மத்திய அரசு ஏற்பாடு செய்த ஸ்ரீ அன்னம் சிறுதானிய நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

Update: 2023-03-20 02:08 GMT

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த சர்வதேச சிறுதானிய மாநாட்டையொட்டி, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அமர்வுகளுடன் கூடிய கருத்தரங்கை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்தியது. இந்த இரண்டு நாள் சர்வதேச சிறுதானிய மாநாடு புது தில்லி பூசாவில் உள்ள NASC வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) தயாரிக்கப்பட்ட சிறுதானியங்களின் தரங்களின் அடிப்படையில் “ஸ்ரீ அன்னா: ஒரு முழுமையான கண்ணோட்டம்” என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் முறையில் வெளியிட்டார்.


உலகின் மிகப் பழமையான இந்தப்பயிர் முறையானது, நிகழ்கால மற்றும் எதிர்கால பயிராக மாறுவதன் மூலம் விவசாய மறுமலர்ச்சியை காண்பதாக FSSAI தலைமை நிர்வாக அதிகாரி ராவ் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டில் இந்தியா சர்வதேச ஆண்டாக உள்ளகிற அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஒரு நிகழ்வு உணர்ச்சி பூர்வமான தருணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். அப்பொழுது பிரதமருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று சால்வையுடன் சென்ற அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ஒரு சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Input &Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News