இந்தியா வர கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த - பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 4 நாட்கள் அமெரிக்கா சென்றுள்ளார். முதல் நாள் வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்தும் காலநிலை குறித்தும் பேசினார்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது: கொரோனா 2வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மிகவும் வலிமையான மக்கள் இரண்டு நாட்டிற்கும் இடையே பாலமாக விளங்குகின்றனர். அவர்களின் பங்களிப்பு மிக மிக பாராட்டத்தக்கவை. மேலும், இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையிலேயே கூட்டாளிகள் ஆவார். எங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அது மட்டுமின்றி அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸை தேர்வு செய்திருப்பது வரலாற்று நிகழ்வு எனக் கூறினார். நீங்கள் இந்தியாவுக்க வர வேண்டும் என்று கமலா ஹாரிஸ் முன்பாக செய்தியாளர்களிடம் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Pm Modi Twiter