எரிசக்தித்துறையில் தற்சார்பை ஏற்படுத்தும் முயற்சிகள்: பிரதமர் பாராட்டு!

எரிசக்தித்துறையில் தற்சார்பை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு.

Update: 2023-02-19 05:58 GMT

இந்தியாவில் வெளிப்படையான உரிமக் கொள்கையின் கீழ், ஒடிசாவில் உள்ள மகாநதி கரையோரப் படுகையில், பூரி-1 என்னும் முதல் ஆய்வுக் கிணறைத் தொடங்கி, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கு ஆயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.


மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டரைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், கூறியிருப்பதாவது, "இது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். எரிசக்தி துறையில் தற்சார்பை எட்டுவதற்கான நமது முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கிறது. இதுபோன்று மேலும பல்வேறு துறைகள் தங்களுடைய முக்கிய குறிக்கோளான தற்சார்பு இந்தியாவில் உருவாக்குவதில் பல்வேறு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பதவியேற்றுதில் இருந்து பல்வேறு இறக்குமதிகள் குறைக்கப்பட்டு ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒரு வழி வகைகளை அதிக அரசு ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக இது பெருமளவில் சாத்தியமாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News