பிரதமர் பரிசு பொருட்கள் ஏலம் - போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் பொதுமக்கள்!

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் ஏலம் தொடங்கிய நிலையில் பலதரப்பு மக்களும் ஆர்வம் காட்டி உள்ளார்கள்.

Update: 2022-09-20 01:56 GMT

பிரதமர் மோடி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10200 பரிசு பொருட்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று தொடங்கியது பலரும் ஏலம் கேட்கின்ற பொருட்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த பரிசு பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்ற போது, புதிய பிரமுகர்கள் சந்திப்பின் போது, நினைவு பரிசாக வழங்கப்பட்ட பல பொருட்களை ஆன்லைன் வழியாக மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. இந்த மின்னணு ஏலம் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளில் தொடங்கியது.


இது அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நீடிக்கிறது இந்த ஏலம் அதிகம் பேர் பங்கேற்ற கூடிய ஏலம் என்ற தலைப்பில் பொருட்களை பட்டியலிட்டு உள்ளது. அதாவது ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு பல தரப்பில் இருந்து மக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்கிறார்கள். அதன்படி அதுக்களவில் பெரும்பாலானோர் ஏலத்தில் வாங்க விரும்பும் பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் இதுதான். பிரதமர் மோடி தேசிய மாணவர் பணியில் போது முன்னாள் வீரர் என்பதற்கான அடையாள அட்டை நேற்று காலை 11 மணி நிலவரப்படி இந்த அட்டையை 20 பேரிடமிருந்து ஏலம் கேட்டுள்ளார்.


அதே மாதிரி அயோதியின் கட்டப்படுகின்ற பிரம்மாண்ட ராமர் கோயிலில் மாதிரி கண்ணாடி பேரையில் வைக்கப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட இந்த மாதிரி அடிப்படை விலை பத்தாயிரத்தி 800 ஆகும். இதையும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கேட்கிறார்கள். மேலும் பிரதமரை பரிசு பொருட்கள் 7 விற்பனைக்கு பல்வேறு நபர்களும் ஆர்வம் காட்டி தருகிறார்கள். இதன் மூலம் திரட்டப்படும் நிதி முழுமையாக கங்கை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News