இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தியது, தடுப்பூசியை வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது! - கமலா ஹாரிஸ் புகழாரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியது மற்றும் கொரோனா தடுப்பூசியை வேகப்படுத்தியதை பார்த்து அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.;

Update: 2021-09-24 01:37 GMT
இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தியது, தடுப்பூசியை வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது! - கமலா ஹாரிஸ் புகழாரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியது மற்றும் கொரோனா தடுப்பூசியை வேகப்படுத்தியதை பார்த்து அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, உலகில உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் உள்ளார் என்று புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியாவுக்கு அவர் வர வேண்டும் என்றார்.


இதன் பின்னர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியபோது, அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி போடும் பணியையும் வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.

மேலும் கொரோனா சமயத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடின. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கிய நாடு இந்தியா என்றார்.

Source: Dinamalar

Image Courtesy: PM Modi Twiter


Tags:    

Similar News