ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியின் பங்கேற்பும் செயலாற்றல் திறனும்!
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபரிடமும் உக்ரைன் அதிபரிடமும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை.
உக்ரைன் ரஷ்யா போருக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ரஷ்ய மக்கள் அமைதி வழத்துடன் இந்தியாவுடன் தொடர்ந்து நண்பர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மோடி அப்போது தெரிவித்தார். பிராந்திய சர்வதேச விவகாரங்கள் இருதரப்பு நல்லுறவு மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்திய ரஷ்ய உறவுக்கு வரும் காலத்திலும் தொடர்ந்து சிறப்பு முக்கியத்துவம் அளிக்க இருவரும் உறுதி ஏற்றனர் .போர் குறித்து பேசியபோது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி மீண்டும் முன் வைத்தார் .தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் உறுதியேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ஸெலென்ஸ்கியிடம் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது சரியான அணுகுமுறை என்பதை வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு இருப்பதாவது:-
"இந்த இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து உக்கரைன் அதிபர் ஸெலெலன்ஸ்கியுடன் ஆலோசனை மேற்கொண்டேன். உக்கரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும் உக்ரரைனுக்கு மனிதாபமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் எனவும் உறுதியளித்தேன்" என்று குறிப்பிட்டார்.