அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்களுடன் நாடு திரும்பும் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 புராதன சின்னங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பழங்கால சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-26 03:17 GMT

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 புராதன சின்னங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பழங்கால சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட புராதன சின்னங்கள் மற்றும் பழங்கால சிறப்பங்களை மீட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி திருட்டு, சட்டவிரோத வர்த்தகம், கலாசார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றுக்க எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என்று பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதி பூண்டுள்ளனர்.


இந்நிலையில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திவரப்பட்ட 157 வகையான புராதனப் சின்னங்கள் மீட்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் பிரதமர் மோடி புராதான சின்னங்களுடன் நாடு திரும்புகிறார்.

பிரதமர் மீட்டுக்கொண்டு வரும் கலைப் பொருட்களில் இந்திய கலாசாரம் சம்பந்தப்பட்டவை என்று கூறப்படுகிறது. மேலும், இந்து மதம், பௌத்த மதம், சமண மதம் தொடர்பான சிலைகள் ஆகும்.

Source, Image Courtesy: Central Minister Shobha Karandlaje Face book


Tags:    

Similar News