இங்கிலாந்து அரசருடன் பிரதமர் மோடி உரையாடல்: இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் பற்றி கருத்து!

இங்கிலாந்து அரசர் ஆன மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடி இருக்கிறார்.

Update: 2023-01-05 04:05 GMT

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து அரசராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் முதல் முறையாக தொலைபேசி மூலம் உரையாடி சிறந்த முறைய சகோதரசுவதிற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் இந்த உரையாடலில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை, பல்லுயிர் பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்திற்கு நிதி உதவி செய்வதற்கான புத்தாக்க தீர்வுகள் போன்றவைகள் இதில் அடங்கும். இந்த விஷயங்களில் இங்கிலாந்து அரசரின் அக்கறை மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மை குறித்து பிரதமர் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.




இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் முக்கியத்தும் குறித்து இங்கிலாந்து அரசருக்கு சுருக்கமாக பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் சேவைகளை பரவலாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக பிரதமர், தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், சுற்றுச்சூழலுக்கு தகுந்த வாழ்வியல் முறைத்திட்டத்தை இந்தியா எவ்விதம் முன்னெடுத்து செல்கிறது என்பது பற்றியும் இங்கிலாந்து அரசரிடம் எடுத்துக் கூறினார்.


இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவழியினர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக செயல்பட்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News