கொரோனா எதிரொலி பரிசோதனை செய்த பின்னரே முதலமைச்சர் சட்டப்பேரவைக்குள் அனுமதி..

கொரோனா எதிரொலி பரிசோதனை செய்த பின்னரே முதலமைச்சர் சட்டப்பேரவைக்குள் அனுமதி..

Update: 2020-04-07 05:07 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவா், முதலமைச்சர், அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் வந்து செல்லும் சட்டப்பேரவையில் நோய்த் தொற்றை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்த் தொற்று பாதித்தவா்களின் உடல் வெப்ப நிலையை அறியும் தொ்மா மீட்டரைக் கொண்டு, சட்டப்பேரவைக்கு வருவோரை சுகாதாரத் துறையினா் பரிசோதித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தபோது சுகாதாரத் துறை ஊழியா்கள் தொ்மா மீட்டரை கொண்டு அவரை பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனா்.

அதேபோல, பிற அமைச்சா்கள், அதிகாரிகளையும் பரிசோதனை செய்த பிறகே பேரவை வளாகத்தில் அனுமதித்தனா்

Similar News