மோடி அரசின் திட்டங்களால் மருத்துவ செலவு இல்லாமல் வறுமை கோட்டை விட்டு வெளியே வந்த மக்கள்!
மோடி அரசின் திட்டங்களால் மருத்துவ செலவு இல்லாமல் வறுமை கோட்டிற்கு வெளியே மக்கள் வந்துவிட்டதாக மத்திய மந்திரி
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரத்துறை மந்திரி மாண்டரியா கூறியதாவது :-
ஒரு வைரஸ் 100 தடவைக்கு மேல் ஒரு மாற்றம் அடைந்தால் அதன் தீங்கு விளைவிக்கும் திறன் குறைந்துவிடும். அதுபோல கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது உலக அளவில் இதுவரை 223 தடவை உருமாற்றம் அடைந்துள்ளது. அதனால் கொரோனாவின் தீய விளைவுகள் கணிசமாக குறைந்துவிட்டன. ஆண்டுக்கு ஒரு தடவை வரும் குளிர் காய்ச்சல் போல் கொரோனாவும் நம்முடன் இருக்கிறது. இன்னும் தொடர்ந்து இருக்கும் தற்போது இருக்கும் .
உருமாறிய கொரோனா உயிருக்கு ஆபத்தானது அல்ல .எந்த எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. சுகாதார விஷயத்தை பொறுத்த வரை உலகம் முழுவதும் பொதுவானது . எனவே எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து பாடுபட வேண்டும். கொரோனா காலத்தில் எல்லா நாடுகளும் ஒன்றாக பணியாற்றிய போது ஏற்பட்ட ஆக்கபூர்வமான விளைவுகளை பார்த்தோம். இந்தியாவில் வளமான மருந்து உற்பத்தி கட்டமைப்பு உள்ளது. அதை உலகமும் அங்கீகரித்துள்ளது.
உலக அளவில் 70 சதவீத எய்ட்ஸ் தடுப்பு மருந்துகளை இந்தியா தயாரிக்கிறது. மற்ற நோய்களுக்கு மருந்து தயாராகிறது. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 13 கோடி பேர் இதில் பயணம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு பணம் செலவழிக்காததால் வறுமை கோட்டுக்கு வெளியே வந்துவிட்டனர் .ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 5 கோடி 50 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவழித்து வறுமை கோட்டுக்கு கீழ் சென்று விட்டனர்.
நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வலுப்படுத்தி உள்ளது. திட்டத்தின் கீழ் மாவட்ட மாநில அளவிலான ஆய்வக்கூடங்களை மாநில அரசுகள் வலுப்படுத்தி உள்ளன. இது தவிர 150 வைரஸ் ஆய்வுக்கூடங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்துள்ளது. சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ரூபாய் 12,740 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI