மோசமான திட்டமிடல், மாநில மின்வாரியத்தால் நிலக்கரி டெண்டர் தாமதம் - தமிழக மின்வெட்டு காரணகர்த்தா யார்?
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறை, மாநிலத்தின் மின் உற்பத்தி மற்றும் விநியோகப் பயன்பாட்டில் உள்ள மெத்தனப் போக்கால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் நிலவுகிறது என Moneycontrol தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறை, மாநிலத்தின் மின் உற்பத்தி மற்றும் விநியோகப் பயன்பாட்டில் உள்ள மெத்தனப் போக்கால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் நிலவுகிறது என Moneycontrol தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22'ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டினால் எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளான முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அதில் மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு இந்திய ரயில்வே மீது குற்றம் சாட்டினார்.
அதில் அவர் குறிப்பிட்டதாக, "கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தி போதுமானது, ரயில்வேயின் ரேக்குகள் பற்றாக்குறை காரணமாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை" என்று ஸ்டாலின் கடிதத்தில் கூறியதாக Moneycontrol தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரயில்வே ரேக்குகளின் பற்றாக்குறை ஒரு தீராத பிரச்சனையாக கூறப்படுகிறது. இப்பிரச்சனையைத் தவிர்க்க, 2011-2016 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது, போதுமான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யும் செயல்முறையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TANGEDCO) கொண்டு வந்தது.
உள்நாட்டில் 72,000 மெட்ரிக் டன் தேவைக்கு 50,000 மெட்ரிக் டன் (MT) மட்டுமே வழங்கப்படுவதால், பற்றாக்குறையை சமாளிக்க தமிழகம் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என அரசு நடத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு முறையை பயன்படுத்துகின்றன அந்த முறைப்படி 30 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் 70 சதவிகித உள்நாட்டு நிலக்கரி கலக்கப்படுகிறது.
TANGEDCO இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடுகிறது. ஆனால் இந்த ஆண்டு டெண்டர் மார்ச் 26 அன்று மட்டுமே வெளியிடப்பட்டது, இது வழக்கமான விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாமதமாகும். தமிழக அரசு இரண்டு மாதங்கள் தாமதமாக டெண்டர் அனுப்பியது.