3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை கத்தோலிக்க சர்ச்களுக்கு அவமானம்: போப் பிரான்சிஸ்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய அவமான சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-10-07 07:13 GMT

பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய அவமான சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் உள்ள சர்ச்களில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியானது. இதில் சர்ச் பாதிரியார்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர்கள் இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாட்டிகனில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துக்குப் பின்னர் போப் பிரான்சிஸ் பேசியதாவது: இது மிகவும் துரதிருஷ்ட சம்பவம். இது எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த சம்பவம் நம்ம கத்தோலிக்க சர்ச்களுக்கு அவமானத்தை கொடுத்துள்ளது. மிகவும் வெட்கக்கேடான செயல்களை இத்தனை ஆண்டுகளாக நாம் கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்றார். இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News