சமூக ஊடகங்களில் முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறு செய்திகள்.. சென்னை திமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீச்சு..

சமூக ஊடகங்களில் முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறு செய்திகள்.. சென்னை திமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீச்சு..

Update: 2020-04-08 02:56 GMT

அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட துணை செயலாளராக பணியாற்றும் கோவை மாவட்டம், கரும்பு கடை பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் "ஹலோ ஆப் எனும் செயலியில் "கருப்பு குதிரை" என்ற பெயரில் சில பதிவுகள் உள்ளன.

அந்த பதிவுகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி குறித்து இழிவுபடுத்தி உள்ளது. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுடன், அதிமுகவினரை மிரட்டும் விதமாகவும் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

விசாரணையில் சம்பந்தப்பட்டவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சுதர்சன் என்பதும் இவர் ஒரு வெப் டிசைனர் என்பதும் இவர்தான் கருப்பு குதிரை என்ற பெயரில் இப்படி பதிவுகளை போட்டு வருபவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவை தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று சுதர்சனை கைது செய்தனர்... விசாரணையும் மேற்கொண்டனர்.

அப்போது, திமுக பிரமுகர் ஒருவர் தனக்கு நண்பர் என்றும் அவர் சொன்னதால்தான், இப்படி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பதிவுகள் செய்ததாகவும் சுதர்சன் தெரிவித்தார். இதனையடுத்து சுதர்சன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.

தற்போது அந்த திமுக பிரமுகர் யார், அவரை கைது செய்வது குறித்த அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கோவை போலீசார் இறங்கி உள்ளனர்.. இதற்காக சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

Similar News