அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக தேவைப்படும் குழந்தை வளர்ப்பு முறை !

அர்ப்பணிப்பு உணர்வு, பொறுமை அதிகமாக தேவைப்படும் குழந்தை வளர்ப்பு முறை.

Update: 2021-08-17 00:15 GMT

ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை தேவைப்படும் கடினமான வாழ்க்கையாக இருக்கலாம். ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதில் பல புதிய சவால்கள் உள்ளன. ஒருவர் எப்போதும் அதைச் சரியாகச் செய்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் பிள்ளைக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வளரவும் ஆரோக்கியமான சூழலைக் கொடுங்கள்.


குழந்தைக்கு இரவு முழுவதும் ஒரு நல்ல தூக்கம் அவசியம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களின் உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறும் குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். ஆனால் குழந்தையை தூங்க வைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது எவ்வளவு கடினமானது என்பது பெற்றோருக்கு மட்டுமே தெரியும். எனவே உங்கள் குழந்தையை தூக்க வைக்க உங்களுக்கு உதவ சில எளிய வழிகள். உங்கள் குழந்தைக்கு ஒரு தூக்க வழக்கத்தை அமைப்பது முக்கியம். அவர்களுக்கு உணவளிக்கும் நேரம் மற்றும் தூக்க நேரத்திற்கு ஒரு வழக்கமான திட்டத்தைத் தீட்டுங்கள். இது அவர்களுக்கு ஒரு பழக்கத்தைத் தூண்டும். மேலும் அவர்கள் தானாகவே அதற்குப் பழக்கமடைந்து, அந்த குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவார்கள்.


 சுற்றுப்புறத்தில் சத்தம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். வசதியான படுக்கையை அமைக்கவும். தூங்குவதற்கு முன் ஒரு தாலாட்டு பாடுவதன் மூலம் படுக்கைக்கு அவர்களை தயார் செய்யுங்கள். ஒரு குழந்தைக்கு நன்கு உணவளிக்க வேண்டும். அப்போது தான் அது நன்கு ஓய்வெடுக்க முடியும். அவர்களை தூங்க வைப்பதற்கு முன், அவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது இரவின் நடுவில் பசி வேதனையை உருவாக்கும். இது அவர்களின் தூக்கத்தை சீர்குலைக்கலாம்.

Input:https://indianexpress.com/article

Image courtesy: wikipedia


 



Tags:    

Similar News