விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய அதிபர் ஜோ பைடன்.!
விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய அதிபர் ஜோ பைடன்.!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறார். அதில் முன்னாள் அதிபர் டிரம்ப் விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் இந்தியா உட்பட அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் விசாவில் மாறுதல்களை செய்துள்ளார். எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளார். இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.