தற்கொலைப்படை தாக்குதலில் பலியான மதகுரு யார் அந்த மதகுரு? நடந்தது எங்கே?

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.

Update: 2022-08-13 14:00 GMT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த தலைவர் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானிக்கு பங்கேற்று உரையாற்றினார்.


அப்போது தன்னுடைய செயற்கைக் காலில் வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானிக்கு அருகில் சென்று வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.தலீபான் மதகுருவின் கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஷேக் இதற்குமுன் 2 கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர் ஆவார்.2020ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் அந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.





 


Similar News