இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உலகம் பயனடைகிறது - டென்மார்க்கில் பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2022-05-04 12:43 GMT

வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். அதன்படி ஜெர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு டென்மார்க் சென்றடைந்தார். டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இரண்டு பேரும் டென்மார்க் வாழ் இந்திய மக்களை சந்தித்து உரையாடினர். அப்போது டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் பேசியதாவது: பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர். டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்பதில் மிக மிக பெருமை அடைகிறேன். தற்போது உங்களுடன் இருப்பது தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

இதனை தொடர்ந்து இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்காக டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சனுக்கு என்னுடைய நன்றியை கூறுகிறேன். தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. தற்போது இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளது. தற்போது இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உலக நாடுகள் பயன் அடைந்து வருகிறது. மொழிகள், உணர்வுகள் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source: Malaimalar

Image Courtesy: Twiter

Tags:    

Similar News