ஆப்கன் குருத்வாராவில் பயங்கர தாக்குதல் - பிரதமர் மோடி கடும் கண்டனம்!

Update: 2022-06-19 13:05 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில் உள்ள கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அங்கு ஏராளமா சீக்கியர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 18) காலை சீக்கியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு திடீரென்று உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் குருத்வாராவுக்குள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை நடத்தினர்.

இதில் குருத்வாராவின் காவலாளி அகமது மற்றும் சீக்கிய பக்தர் என்று இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியிருப்பதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. இதில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா மீது கோழைத்தனமான பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதனை கண்டிப்பதோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News