வாரணாசியில் பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிகப்பெரிய தியான மையம்!

வாரணாசியில் உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் மோடியை திறந்து வைத்தார்.

Update: 2023-12-19 03:45 GMT

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்றார். இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று அவர் ஸ்வர்வேத மகா மந்திர் என்ற தியான மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய தியான மையமாகும். அம்மையம் 7 மாடிகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். திறப்பு விழாவைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி தியான மையத்தை சுற்றிப் பார்த்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :-


நாம் அடிமையாக இருந்த காலத்தில் இந்தியாவை பலவீனப்படுத்த நினைத்த ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் நமது அடையாளங்களை தான் குறி வைத்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு அந்த கலாச்சார அடையாளங்களை மறுக்கட்டமைப்பு செய்வது அவசியமாக இருந்தது. இருப்பினும் சுதந்திரத்திற்கு பிறகு சோமநாதர் கோவிலை மறுக்கட்டுமனம் செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு உருவானது. அந்த சிந்தனையை பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. அதன் விளைவாக நாடு தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக் கொண்டது. நமது பாரம்பரியம் குறித்து பெருமைப்படுவதை மறந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில் காலச்சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்றுள்ளது.


அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று விட்டதாகவும் நமது பாரம்பரியம் குறித்து பெருமைப்படுவதாகவும் செங்கோட்டையிலிருந்து நாடறிவித்தது. சோமநாதர் கோவிலில் இருந்து தொடங்கிய பணி இப்போது ஒரு இயக்கமாக மாறிவிட்டது. காசி விஸ்வநாதரின் பிரம்மாண்டம் இந்தியாவின் பெருமையை பாடி வருகிறது. காசிக்கு புத்துயிரூட்ட அரசு, சமூகம் , துறவிகள் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News