இந்தியாவின் பெருமையை உணர்த்தும் விதமான பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமர் மோடி !
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்நாட்டில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்நாட்டில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 22ம் தேதி காலை 11மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனுக்கு புறப்பட்டு சென்றார். அதன்படி நேற்று காலை வாஷிங்டன் சென்றடைந்தார். அவரை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அமெக்காவில் அதிகாரப்பூர்வ நிகழ்சசிகளை தொடங்கினார். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணியளவில் சந்தித்து இரண்டு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். அதனை முடித்துக்கொண்ட பிரதமர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப் பேசினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் மாநாட்டு தலைவர்களுக்கு இந்திய பாரம்பரியம் வாய்ந்த நினைவு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
அதன்படி கமலா ஹாரிசுக்கு, குலாபி மீனாகரி செஸ் விளையாட்டுக்கான அன்பளிப்பு ஒன்றையும் பிரதமர் மோடி வழங்கினார். இது உலகின் மிக பழமையான காசி நகருடன் நெருங்கிய தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் விளையாட்டுக்கான பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளும் (செஸ் காய்கள்) கைவினை பொருட்கள் வகையை சேர்ந்தது. அதன் நிறங்கள் காசி நகரின் பெருமையை காட்டும் விதமாக அமைந்துள்ளது.
அதே போன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட குலாபி மீனாகரி கப்பல் ஒன்றையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இதில் உள்ள வண்ணங்கள் காசி நகரின் பன்முக தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு சந்தனத்தில் உருவான புத்தர் சிலை ஒன்றையும் பிரதமர் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi,Republic World