பிரதமர் மோடியை தேடி போய் கை குலுக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - உலக அரங்கில் நிமிர்ந்த இந்திய மதிப்பு

Update: 2022-06-28 09:42 GMT

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 மாநாடு, ஜெர்மனி நாட்டில் உள்ள எல்மாவ் மலைப்பகுதியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பருவநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் சுகாதாரத்தில் சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் என்கின்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் வந்திருந்த அனைத்து நாட்டின் அதிபர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த சமயத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியுடன் பேசுவதற்காக வந்தார். கனடா பிரதமருடன் பேசிக் கொண்டிருந்த மோடி இதனை கவனிக்கவில்லை. அப்போது பிரதமர் மோடியின் தோளை தட்டிய ஜோ பைடன் அவருடன் கை குலுக்கி பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய பிரதமரை வல்லரசு நாட்டின் அதிபர் தேடி வந்து கை கொடுக்கின்ற சம்பவம் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: United News Of India

Tags:    

Similar News