பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த 'பல்லடம்' கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை!
'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பல்லடம் வந்திருந்த மோடி பேசிய உரை.
என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது.2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக.தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள்.
‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது.தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக.பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம்.இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன்.
எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே. தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் . இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.