'பிரதமர் மோடி அலை தமிழ்நாட்டில் சூறாவளியாக எழும் சுனாமியாக எதிர்க்கட்சிகளை சுருட்டி போடும்'- மத்திய மந்திரி எல்.முருகன்!
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. மோடி குறித்து எல்.முருகன் கூறிய தகவல்கள்
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி , தமிழ் மொழியின் பெருமைகளையும் திருக்குறளின் சிறப்பையும் உலகம் அறியச் செய்து வருபவர். '.சுதந்திர தின உரையில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற குறளை மேற்கோள் காட்டியதையும் தேசிய ஒற்றுமை தினத்தன்று 'மன்னும் இமயமலை எங்கள் மலையே! மாநில மீதிது போற்பிரிதிலையே! என்ற பாரதியாரின் பாடலை பாடி ஒற்றுமையின் மகத்துவத்தை பறைசாற்றியதையும் தமிழக மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பர்.
லடாக்கில் 'மறமானம் மாண்ட' என்ற குரலை சுட்டிக்காட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கமளித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் புறநானூற்று பாடலை சுட்டிக்காட்டி தமிழை தலைநிமிரச் செய்ததும் என்றென்றும் நம் நினைவில் நிழலாடுகிறது. தமிழ் மீது மட்டுமல்ல தமிழக மக்கள் மீதும் மாறாத பாசத்தையும் அன்பையும் பொழிபவர். கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் மக்கள் நலத்திட்டங்களை அவர் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளார்.
அவர் எண்ணத்திலும் செயலிலும் தமிழக மக்களின் நலனுக்காக திட்டங்கள் எப்போதும் இருக்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திருச்சிக்கு வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றத்துடன் திருச்சி விமான நிலையத்தின் புதிய நிலையத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து 19,1850 கோடி மதிப்பில் ஆன புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார் .
சேலம் - மேட்டூர் இரட்டை ரயில் பாதை, மதுரை -தூத்துக்குடி இரட்டை இரயில் பாதை ,திருச்சி - மானாமதுரை விருதுநகர் - மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை , விருதுநகர் - தென்காசி மற்றும் செங்கோட்டை- திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். அதோடு திருச்சி- கல்லகம் தேசிய நெடுஞ்சாலை, காரைக்குடி- ராமநாதபுரம் இருவழிச் சாலை , சேலம் - வாணியம்பாடி நான்கு வழிச்சாலை திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணூர்- காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்கு கப்பல் நிறுத்துமிடம், ரூபாய் 9000 கோடி மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது மட்டுமின்றி சாலை திட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.