பாஜக ஆட்சியில் வளமான பாரதம் வளமான வடகிழக்கு: 55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்- அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
மத்திய பாஜக ஆட்சியில் தான் வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சி கண்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வடகிழக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்த வேண்டும் என்றால் 20 ஆண்டுகள் ஆகும் என்று அவர் விமர்சித்தார். அருணாச்சல பிரதேசம் , மணிப்பூர், மேகாலயம், நாகாலாந்து ,சிக்கிம் ,திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் 55 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களின் தொடக்கம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி அருணாச்சல பிரதேசம் இட்டா நகரில் சனிக்கிழமை நடைபெற்றது .
'வளமான பாரதம் வளமான வடகிழக்கு' என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்ததோடு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்க பாதையை மக்களின் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது :-
இப்போது தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களின் மூலம் தெற்காசிய மற்றும் பிரகாசி நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் சுற்றுலா மற்றும் எதிர் உறவுகளின் வலுவான இணைப்பாக வடகிழக்கு பிராந்தியம் உருவெடுக்கும். இந்த பிராந்தியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள அதே திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்த வேண்டும் என்றால் 20 ஆண்டுகள் ஆகும். மோடி உத்திரவாதம் என்ன என்பதை வடகிழக்கு பிராந்தியத்துக்கு வருகை தரும் எவரும் அறிந்து கொள்ள முடியும்.
அனைத்து காலநிலைகளின் போதும். தவான் பகுதிக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் 'சேலா' சுரங்க பாதைய வியூகரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சுரங்கப்பாதைக்கு கடந்த 2019 இல் நான் அடிக்கல் நாட்டிய போது தேர்தல் நாடகம் என்று சிலர் விமர்சித்தனர் ஆனால் அவர்களின் கருத்து தவறானது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது இந்த சுரங்கப்பாதை மோடியின் உத்தரவாதத்திற்கு சாட்சியாக அமைந்துள்ளது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுத்தமான குடிநீர் நல்ல வீடு, எரிவாயு இணைப்பு ,மின்சாரம், இணைய வசதியை உறுதி செய்யவே முன்னுரிமை அளித்து வருகிறேன் என்றார் பிரதமர் மோடி.