9 செயற்கைக்கோளுடன் PSLV -C54 ராக்கெட்: விண்ணில் செலுத்தும் இந்தியா!

ஒன்பது கோள்களை விண்ணில் செலுத்த இருக்கும் இந்தியா.

Update: 2022-11-26 12:08 GMT

இஸ்ரோ (ISRO)  எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, காலநிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது. இவற்றை விண்ணில் செலுத்தி இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவை மேலும் உறுதி செய்கின்றது. இந்தியா சார்பில் செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி அவற்றை வெற்றிகரமான நடைமுறைகளை ஆக்கும் முயற்சியில் இஸ்ரோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் புதுமையான முயற்சிகள் காரணமாக, இஸ்ரோ தனியார் துறை ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி - சி 54 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த ராக்கெட் ஓசோன் சாட் -3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் எட்டு சிறிய வகை நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது.


இந்த PSLV C-54 ராக்கெட் நான்கு நிலைகளை கொண்டுள்ளது ஆகும். ஒவ்வொரு நிலையிலும்  தனித்தனி உந்துவிசை அமைப்புகளுடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது நிலைகளில் திட எரிபொருட்களும், இரண்டாவது மற்றும் நான்காவது திரவ உந்து சக்திகளும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் பணியில் இது 56வது திட்டப்பணி. மேலும் இந்த ஒரு செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப தொடர்பான முக்கிய விவரங்களை இந்தியாவிற்கு சேகரித்து தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News