உளவியல் சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?
Psychotherapy meaning and important tips.
மனநல பிரச்சினைகள் மற்றும் மன நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த வழி முறையாக உளவியல் சிகிச்சை கருதப்படுகிறது. இதன் நோக்கம் நோயாளிகளுக்கு பதட்டம் அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் உணர்வுகளை உளவியல் ரீதியாகப் புரிந்துகொள்வதாகும். இது பல கடினமான சூழ்நிலைகளை மிகவும் எளிமையான முறையில் கையாள உதவுகிறது. பெரும்பாலும் இந்த சிகிச்சையின் காலம் குறைந்தது 1 வருடத்திற்கு நீடிக்கிறது. வாழ்வியல் மாற்றத்திற்காக ஆர்வமுடன் சிகிச்சையில் ஈடுபடும் நபர்களே, இந்த சிகிச்சையின் பலனை பெறுகின்றனர். மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற மனம் சார்ந்த சிக்கல்கள் முதல் போதைப்பொருள் மற்றும் குடும்ப தகராறு வரையிலான பிரச்சினைகளுக்கு, உளவியல் சிகிச்சை நிவாரணம் அளிக்கிறது.
ஒரு நபர் எந்தவித பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, இந்த சிகிச்சை முறை உதவுகிறது. மிகவும் கோபமாகவும், மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதாகவும் உணரக்கூடிய ஒருவர் எதிர்மறையான நடத்தைகளைக் கொண்டிருக்கலாம். தமக்கு உண்டாகும் மன காயங்களையும், பதட்டத்தையும் அமைதியான முறையில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம், மற்றவர்களிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த சிகிச்சை முறையில், நோயாளிகள் தங்களுக்கு மனசிக்கல் ஏற்படும் போது, அவர்களின் அணுகுமுறையை மாற்றியமைக்கவும், அவற்றைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.
மனோதத்துவ சிகிச்சை (Psychodynamic therapy) இந்த சிகிச்சை முறையானது, நோயாளியின் மன ஆழத்துடன் தொடர்புடைய நடத்தை மீது கவனம் செலுத்துகிறது. ஒரு நபர், அவரது குழந்தைப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், இன்றளவும் தன்னை தொடர்வது போல உணர்கிறார் எனில், அவர் வளர்ச்சியின் போதே இவ்வாறு நடந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இந்த சிகிச்சையின் முக்கிய பணியாதெனில், ஒரு நபருக்கு அவரது நடத்தையைப் பற்றி முற்றிலுமாக அறியப்படுத்துவதாகும். இதனால், குழந்தை பருவத்தில் உள்ள பிரச்சினைகள் தற்போது தம்மை பாதிக்காது என்பதை அந்த நபர் அறிந்து கொள்கிறார். இதன் மூலம் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
Input & Image courtesy: Logintohealth