நிதி அமைச்சர் பி.டி.ஆரை அந்தரத்தில் நிறுத்திய ரோப் கார்!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்டர் ரோப் கார் பாதி வழியில் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு.

Update: 2022-12-19 01:55 GMT

அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவர் மலை கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக சென்றார். அப்பொழுது திடீரென மின்தடை ஏற்பட்டது, இதனால் மேலே சென்று ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.


ரோப் காரில் நிதியமைத்துடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். 5 நிமிடங்களுக்கு பிறகும் மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனி முருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாக அமைச்சருக்கு கீழே இறங்கினார். பழனிவேல் தியாகராஜர் சென்ற ரோப் கார் பாதி வழியில் அந்தரத்தில் தொடங்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டத. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இந்த ஒரு நிகழ்வு காரணமாக பல்வேறு கமாண்டுகளும் வருகிறது. குறிப்பாக பெரியார் கூறிய சித்தாந்தத்தை பின்பற்றும் தி.மு.க.காரர்கள் எதற்கு கோவில் குளங்களுக்கு செல்கிறார்கள் என்பது போன்று கருத்துக்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News