இந்திய ராணுவத்தால் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி அப்துல் ரஷீத் காசி சுட்டுக்கொலை!

இந்திய ராணுவத்தால் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி அப்துல் ரஷீத் காசி சுட்டுக்கொலை!

Update: 2019-02-18 08:08 GMT

காஷ்மீரில் புல்வாமாவில்14-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 39 துணை ராணுவ வீரர்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர்களால் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்ததால் வீரமரணம் அடைந்தனர். இதனால் கடந்த சில நாட்களால் இந்தியாவில் பலர் பெரும் சோகத்தில் உள்ளனர்.


நேற்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், தகவல் குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர், தீவிரமாக தேடினர். அப்போது, அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர்.


இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின்  தளபதி அப்துல் ரஷீத் காசி மற்றும் கம்ரான் என்ற  2  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் கூடிய சீக்கிரம் வெளிவரும் என்னும் எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News