சிவகாசியில் QR கோடு கொண்ட நாள்காட்டி: முக்கிய சிறப்பம்சம் என்ன?
சிவகாசியில் QR கோடு கொண்ட நாள் காட்டி தயாரிப்பு பல்வேறு முக்கிய அம்சங்களை பெற்று விளங்குகிறது.
சிவகாசியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான QR கோடுகள் தயாரான புதுமையான நாள்காட்டிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் நிறுவனம் வருகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான நாற்காட்டியின் QR கோடு அச்சடித்து அதன் மூலம் பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் தயாரித்து இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி தை பொங்கல் நாளில் அச்சிடப்பட்ட கியூ.ஆர் கோடு கைபேசியில் ஸ்கேன் செய்தால் அந்நாளின் சிறப்பம்சங்களை வீடியோவில் பார்க்கலாம். அதே போல ஒரே நாளில் இரண்டு விழாக்கள் வந்தால் அந்த தேதியில் உள்ள QR கோடு அச்சிடப்பட்டிருக்கும் இவற்றை தனித்தனியாக கைபேசிகளில் ஸ்கேன் செய்தால் அந்த நிகழ்வுகளின் சிறப்பம்சங்களை வீடியோ வாயிலாக காண முடியும்.
மேலும் தேச தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நரசிம்மராவ், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பிறந்தநாள் அன்று உள்ள தேதிகளில் அச்சிடப்பட்ட கியூ.ஆர் கோடு மூலம் அவர்கள் குறித்த முழு விவரங்களை வீடியோ மூலமாக தெரிந்து கொள்ள முடியும். அதைப்போல 2023 ஆம் ஆண்டுக்கான 365 நாட்களுக்கான தகவல்கள் உள்ளிட்ட வீடியோக்களும் QR கோடுகளும் தெரிந்து கொள்ளலாம் கூறியிருக்கிறார்.
நிறுவன உரிமையாளர் சிவகாசி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் இது பற்றி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நாட்காட்டில் புதுமைகளை புகுத்தினால் மட்டுமே சந்தையில் நிலைத்து நிற்க முடியும். கடந்தாண்டு குழந்தைகள் விரும்பும் வண்ண அட்டையில் அனிமேஷன் உருவங்களை அச்சித்தும், அதன் அடிப்படையில் இந்த ஆண்டு QR கோடு கொண்ட நாள் காட்டி தயாரித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi