வருகிறது ரபேல் - எல்லை பிரச்னையில் ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்படும்!

வருகிறது ரபேல் - எல்லை பிரச்னையில் ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்படும்!

Update: 2019-08-22 01:54 GMT

இந்திய விமானப் படைக்குபிரான்சைச் சேர்ந்த, 'டசால்ட்' நிறுவனத்திடம் ரபேல் ரக அதி நவீன போர் விமானங்கள் வாங்க 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை போர் விமானம் 2 இரட்டை என்ஜின் கொண்டதாகும் வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்.


பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்கள் முதல் கட்டமாக 4 விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


இதற்கான விழா செப்டம்பர் 3 வாரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்படுகிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.மேலும் பிரான்ஸ் நாட்டின் உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்து கொள்கின்றனர். மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வரத்தொடங்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் ரபேல் போர் விமானத்தி்ல் பயிற்சி பெறுவதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் 24 பேர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வகையான போர் விமானத்தை பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயன்படுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் அணு ஆயுத கொள்கை மாறலாம் என குறிப்பிட்டார். இந்நிலையில் ரபேல் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் பயன்படுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுவதால் பாகிஸ்தான் மிரண்டு இருக்கிறது. எப்போது என்ன செய்வார்கள் இந்தியா என கலக்கத்தில் உள்ளதக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.


Similar News