இந்தியா - பூடான் இடையே ரயில் போக்குவரத்து: பிரதமர் மோடியால் வலுவடைந்த இரு நாட்டு உறவுகளும் நட்பும்!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் உரையாடி இரு நாடுகளுக்கு இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கு ஒப்பந்தம் இட்டுள்ளார்.

Update: 2024-03-23 11:42 GMT

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசு முறை பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தார். தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையில் இந்தியா பூடான் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது உட்பட பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையப்பம் ஆகின.பூடான் பிரதமர் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற பிரதமர் ஷெரிங் டோப்கே முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அப்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர் பூட்டானுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் .


அந்த அழைப்பை ஏற்று பூடானுக்கு வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார் .அதன்படி பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு பூடான் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பூட்டானின் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை பிரதமர் மோடி தனி விமானத்தில் பூடான் வந்தார் .பரோ விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது .


விமான நிலையத்துக்கு அந்நாட்டு பிரதமர் வந்திருந்தார் .அந்நாட்டு பிரதமர் நம் நாட்டு பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார் .தொடர்ந்து பிரதமர் மோடியால் எழுதப்பட்ட பாரம்பரிய கர்பா பாடலுக்கு பூடான் இளைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். இளைஞர்களின் நடனத்தை கண்டு ரசித்த பிரதமர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் .விமான நிலையத்தில் இருந்து திம்பு நகர் வரை காத்திருந்த மக்கள் மோடியை கொடியசைத்து வரவேற்றனர் .திம்பு நகரில் பிரதமர் மோடியை வரவேற்று பிரமாண்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.


இதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே உடன் பிரதமர் மோடி சந்தித்தார் .சந்திப்பில் ஒன்றாக இணைந்து மதிய உணவருந்திய தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர் .இதை அடுத்து எரிசக்தி, எண்ம இணைப்பு ,விண்வெளி வேளாண்மை, இளைஞர் நலன் ,மற்றும் பிற துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையப்பம் ஆகின. குறிப்பாக இந்தியா பூடானிடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தானது.


SOURCE :Dinamani

Similar News